உள்நாடு

தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று

(UTV | கொழும்பு) – இலங்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜப்பான் ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப அனுசரணையில் ஊடகத்துறை அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

உலகளாவிய தொலைக்காட்சி ஒளிபரப்புக் கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கட்டமைப்பை பின்பற்றாவிடின், இலங்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் காலாவதியாகும் சூழலை தவிர்க்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியையும் செலுத்தக் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் நசீர் அஹமட் நியமனம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை