உள்நாடு

தொடர்ந்து வரும்  வைத்தியசாலையில் தற்கொலைகள்

(UTV | கொழும்பு) –  தொடர்ந்து வரும்  வைத்தியசாலையில் தற்கொலைகள் 

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த  14 ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கட்டிடத்தின் 8வது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்த பெண், முதல் தளத்தின் முன்புறம் உள்ள கான்க்ரீட் தளத்தில் விழுந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் நீர்கொழும்பு அளுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 14 ஆம் திகதி களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நோயாளி ஒருவர் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாணவன், மாணவியை கொடூரமாக தாக்கிய தேரரால் சர்ச்சை!

O/L மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

editor

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ? நிதியமைச்சகம் அனுமதி வழங்கவில்லை – அமைச்சர் விஜித ஹேரத்

editor