உலகம்

தொடர் மாடிக் கட்டிட தீ விபத்தில் சுமார் 80 பேர் காயம் 

(UTV | தென்கொரியா) – தென்கொரியாவின் உல்சான் நகரில் தொடர்மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட புகையினை சுவாசித்த சுமார் 80 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தீவிபத்துக்குள்ளான 32 மாடி கட்டடத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

பொது மக்களிடம் மன்னிப்பு கோரும் ரஷ்ய ஜனாதிபதி!

கலிபோர்னியா மீண்டும் முடக்கம்

அமெரிக்காவில் 2 இலட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்