வகைப்படுத்தப்படாத

தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத் தலைவர் என். யூ. கே.ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்தே இந்த சேவைப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொடரூந்து சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே இந்த சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

சேவைப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றபோதும், தொடரூந்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார்.

Related posts

சீன இறக்குமதி பொருட்களுக்கு இன்று முதல் 25% கூடுதல் வரி

சவுதி அரேபிய இளவரசருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

ஐஸ் ஹாக்கி வீரர்கள் பலி-அஞ்சலி நிகழ்ச்சியில் ஜஸ்டின் ட்ருடாவ்