வகைப்படுத்தப்படாத

தொடரூந்து சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UDHAYAM, COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து சாரதிகள் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதன் காரணமாகவே, இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்ததாக தொடரூந்து சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டார்.

பிரச்சினை தொடர்பில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

எனினும், அப்போது தங்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை தொடரூந்து சாரதிகள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

Water cut in Rajagiriya and several areas

மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது

කුසුම් පීරිස් මහත්මියගේ අවසන් කටයුතු අද