வகைப்படுத்தப்படாத

தொடரும் மழையுடன் கூடிய காலநிலை

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் வாரத்தில் தென்மேற்கு பருவ பெயர்ச்சி காரணமாக மழையுடனான காலநிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடைக்கிடையில் பெய்யும் மழை காரணமாக ஒரு வாரகாலப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை தொடர்கிற பட்சத்தில் டெங்கு நோய் தொற்று அதிகரிக்கக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Vote on no-confidence motion against Govt. today

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலையகம் விஜயம்

இலங்கை தேசிய தரப்படுத்தல் விருதிற்காக விண்ணப்பங்கள் கோரல்