ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் இன்று (15) மதியம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இத்தீவிபத்து காரணமாக அத்தோட்டத்தில் அமைந்துள்ள 10 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
இதனால் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.
இன்று தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி வந்த மக்களின் வீடுகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
