வகைப்படுத்தப்படாத

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 7 ஆயிரம் அதிகாரிகள்

(UTV|COLOMBO)-உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

நாடுமுழுவதும் கண்காணிப்பு பணிகளுக்காக 7 ஆயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெஃப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தலை கண்காணிக்கும் பொருட்டு நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 10 பேர் நேற்று பல மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர்.

இந்தியா, மாலைத்தீவு, தென்கொரிய மற்றும் இந்தோநேசியா ஆகிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களே இலங்கை வந்துள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்புக்கு அமைய அவர்கள் இலங்கை வந்தனர்.

இந்தநிலையில், அவர்கள் தேர்தல் தொடர்பில் தயாரித்த அறிக்கையை எதிர்வரும் 11 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இமயமலைக்கு ஏற்படப் போகும் பேரழிவு?

ஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

200 ஆண்டு பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து