வணிகம்

தேயிலைக்கான நிவாரண நிதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

(UTV|கொழும்பு) – சிறு தேயிலை உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தின் கீழ், தேயிலைத்துறையை மேம்படுத்தவும் தேயிலைக்கான நிவாரண நிதியை பெற்றுக்கொடுக்கவும் தேயிலைச் செடிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டுத் தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் பாரிய பங்கினை செலுத்துவதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

2020 ஜனவரியில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள vivo S1 Pro

டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி!

இந்த வருடம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் வருடமாக பிரகடனம்