வணிகம்

தேயிலை தொழில் துறைக்கு 150 வருடங்கள் பூர்த்தியடைவதை நினைவுகூரும் வகையில் புதிய பத்து ரூபா நாணயம் வௌியீடு

(UDHAYAM, COLOMBO) – தேயிலைத் தொழில்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடியை முற்றாக நீக்கி அதனை அபிவிருத்தி செய்வதன் தேவை குறித்து நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேயிலை தொழில் துறைக்கு 150 வருடங்கள் பூர்த்தியடைவதை இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செலாவணியை பெற்றுக் கொள்வதற்கு தேயிலைத்தொழில்துறை மிகவும் முக்கியமானதாகும்.

இந்த நிலையில், புதிய சந்தைகளை அடையாளம் காண்பது அத்தியாவசியமாகும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தேயிலை தொழில் துறைக்கு 150 வருடங்கள் பூர்த்தியடைவதை நினைவுகூரும் வகையில் புதிய பத்து ரூபா நாணயம் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கையில் எமிரேட்ஸ் விமான சேவைகள் அதிகரிப்பு

பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் இல்லை