உள்நாடுசூடான செய்திகள் 1

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த 1700ரூபாவாக அதிகரிப்பு – வர்த்தமானி வெளியானது

தேயிலை, இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான அரசவர்த்தமானி வெளியாகியுள்ளது. குறித்த வர்த்தமானியில், தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின்  குறைந்தபட்ச நாளாந்த ஊதியம்  1,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளாந்த ஊதியம் 1350 ரூபாவாகவும், நாளாந்த மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவாகவும் வழங்கப்படும். இந்நிலையில், மொத்தமாக நாளாந்த ஊதியம் 1700 ரூபாய் வழங்கப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என, இன்று (01) முற்பகல் கொட்டகலை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். – PMD

 

 

Related posts

1.5 பில்லியன் இலாபத்தினை திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ!

மைத்திரியின் காலத்தில் நடந்த 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடு!

editor

நிதியமைச்சராக இருந்த காலம் தொடர்பில் விசாரணைகளை நடத்த மங்கள கோரிக்கை