உள்நாடு

தேசிய விருது விழாவில் கிழக்கு மாகாணத்தின் பெருமைசேர்த்த சப்னாஸ்!

இலங்கை மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான சங்கமான SLASSCOM ஏற்பாடு செய்த SLASSCOM Ingenuity Awards 2025 தேசிய விருது விழாவில், Nest International (Pvt) Ltd நிறுவனம் Best Start-up பிரிவில் முதலிடம் பிடித்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

இந்த விழா 2025 ஜூலை 1ஆம் திகதி, கொழும்பு தாஜ் சமுத்திரா நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொழில்நுட்பம், கல்வி, வர்த்தகம், வேலைவாய்ப்பு, மற்றும் புதுமை சார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டு தோறும் நடத்தப்படும் இவ்விழா, நாடளாவிய ரீதியில் ஒரு தனித்துவமான நிகழ்வாக அமைந்தது.

Nest International Pvt Ltd நிறுவனத்தின் ஸ்தாபகரான பொறியியலாளர் Nasar Mohammed Safnas மற்றும் நிர்வாக ஆலோசகரான NJ. Zeron Anas ஆகியோர் இந்த தேசிய விருதை, விழாவின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்த விருது வழங்கும் விழாவில், 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா, SLASSCOM நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நிஷான் மெண்டிஸ், மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் நிர்வாகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Nest International Pvt Ltd நிறுவனத்தின் தேசிய வெற்றிக்கு வழிவகுத்தது, Nest 360 Degree எனும் புதியதோர் தொழில்நுட்பத்தின் அறிமுகமாகும். இது, தொழில்நுட்ப சேவைகளின் புதிய பரிமாணங்களை நவீன கட்டுமானத் துறையில் ஏற்படுத்தியுள்ளது, மேலும் இதுநவீனத் திறனுடன் வடிவமைக்கப்பட்ட தீர்வாகும். நாட்டின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நிறுவனம் எனும் வகையில், இவ்விருதை வெல்வது கிழக்கு மாகாணத்துக்கு ஒரு பெரும் கௌரவமாகும்.

இந்த விழாவில், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், தனியார் மற்றும் பொது மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலுள்ள போட்டியாளர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

SLASSCOM இன் மூலமாக, இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் புதுமை யோசனையாளர்கள் நாடு முழுவதும் தொழில்துறையின் வளர்ச்சிக்காக பங்களிக்க வழிவகை செய்யப்படுகிறது.

Nest International Pvt Ltd நிறுவனத்தின் இந்த வெற்றி, இளம் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும், கிழக்கு மாகாண இளைஞர்களுக்கான ஒரு பிரதான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.

Related posts

நாடு முடக்கப்படுவது தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவுமில்லை

பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படும் நயன!

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு – செந்தில் தொண்டமான் இரங்கல்

editor