வகைப்படுத்தப்படாத

தேசிய மீலாத் விழாவுக்கு தயாராகும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி தற்போது துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகள் கடும் மழைக்கும் மத்தியில் நிறைவுறும் நிலையில் உள்ளன.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு யாழ் மாநகரசபை ஊடாக முழு முஸ்லிம் பிரதேசங்களினதும் வீதி மின்விளக்கு, வீதி வடிகான்கள் மறுசீரமைப்பு போன்றவற்றிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய யாழ் மாநகர சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

බීමත් රියදුරන් 200 දෙනෙකු අත්අඩංගුවට

நாடு பூராகவும் போராட்டத்திற்கு தயாராகும் நீர் விநியோக ஊழியர்கள்

நீடிக்கும் வௌ்ள அபாய எச்சரிகை!