புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒரு சிறப்பான மைல்கல்லை உறுதிப்படுத்தும் வகையில், விரைவில் தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்படவுள்ள Windscape Mannar (Pvt) Ltd திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் நோக்கில் ஒரு கண்காணிப்பு விஜயத்தில் அர்கம் இல்யாஸ் கலந்து கொண்டார்.
மின்சக்தி அமைச்சின் முழுமையான மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படும் Windscape Mannar (Pvt) Ltd திட்டத்தின் மூலம், 20 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்வலையமைப்பில் இணைக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இக் கள விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திரு மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு கே. கனகேஸ்வரன், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், மாகாண நிர்வாக நிறுவனங்களின் தலைவர்கள்,மாவட்ட செயலக அதிகாரிகள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
