அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் MPக்களின் பட்டங்களை ஆராய குழு நியமிக்க பிரேரணை – ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி, பேராசிரியர், கலாநிதிப் பட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய ஜனநாயக முன்னணியும் தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் குழுத் தலைவர் ஜீவன் தொண்டமான் இது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் மற்றும் மற்றுமொரு அமைச்சரின் பொறியியற் பட்டம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் இந்த தெரிவுக்குழுவை நியமிக்க முன்வந்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிக்கு சபாநாயகரிடமிருந்தோ அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்தோ ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில் கிடைக்காததால், உரிய தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என்றும், புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

Related posts

ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் CIDயில் இருந்து வௌியேறினார்

editor

குணமடைந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு

அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வு கூட்டம்