அரசியல்உள்நாடுபிராந்தியம்

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் பட்ஜெட் 3வது முறையாகவும் தோல்வி!

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, நகர சபை தவிசாளர் யசஸ்வின் கோதாகந்த தலைமையில் சபை நேற்று (24) கூடியது.

இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக 9 வாக்குகளும், எதிர்க்கட்சிக்கு 10 வாக்குகளும் கிடைத்தன.

இதற்கமைய, ஒரு மேலதிக வாக்கினால் ஹிக்கடுவை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.

Related posts

ஒருநாள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

வழமைக்கு திரும்பிய குடிவரவு குடியகல்வு திணைக்களம்

editor

ரிஷாதின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு