சூடான செய்திகள் 1

தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமனம்

(UTV|COLOMBO)  தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கான கடிதத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டேகொடவிடமிருந்து ருவன் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் உடல் நல குறைவு காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா தேசிய புலனாய்வுப்பிரின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் அறிவித்து பதவி விலகியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.முன்னாள் புலனாய்வுத்துறை தலைவர் சிசிர மென்டிஸ் கடந்த வாரம் பாராளுமன்ற தெரிவு குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

எதிர்வரும் 19ஆம் திகதி வரைக்கும் காலக்கெடு – பெப்ரல்

மர்ம நபர் துப்பாக்கி சூடு – 05 பேர் பலி

பயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் – அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை