அரசியல்உள்நாடு

தேசிய இளைஞர் படையணிக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நேற்று (20) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில், சுனில் குமார கமகேயிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை திட்டமிடல் சேவையில் விசேட தர அதிகாரியாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட இவர், முன்னர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளராகவும், சுகததாச உள்ளக விளையாட்டரங்க அதிகாரசபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன், அவர் சிறிது காலம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

தேசிய இளைஞர் படையணியின் புதிய பணிப்பாளர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

கல்முனை மாநகர சபையில் Online Payment System அங்குரார்ப்பணம்

UPDATE – லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படவும் – சாகர, சஜித்திடம் வலியுறுத்தல்