வகைப்படுத்தப்படாத

தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரமும் கொடி தினமும் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு

(UDHAYAM, COLOMBO) – தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் மற்றும் இந்து சமய அறநெறிக்கல்வி

கொடி தினம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் அவர்களது தலைமையில் கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மாவட்ட செயலகம் ஊடாக கிளிநொச்சி கிருஸ்ணர் கோவில் வரை பேரணியாக சென்று அனுஸ்டிக்கப்பட்டது.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்துசமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் ”அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்வீர்” என்ற தொனிப்பொருளில் தேசிய ரீதியில் அறநெறிக்கல்வி வாரம் சகல மாவட்டங்களிலும் அனுட்டிக்கப்படுகின்றது. அந்த வகையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவட்ட செயலக இந்து கலாச்சார பிரிவினால் ஒழுங்கு செய்து

நடாத்தப்பட்டது. இவ் விழிப்புணர்வு நடைபவனியில் மாவட்ட மற்றம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆலய நிர்வாகத்தினர்கள் இந்துசமய பக்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந் நடைபவனியினைத் தொடர்ந்து கிருஸ்ணர் ஆலயத்தில் கிளிநொச்சி மாவட்ட சின்மயா மிஸன் சுவாமிஜி அவர்களால் அறநெறிக்கல்வி பற்றிய சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது.

இதேவேளை இக்கொடிவார சிறப்பு நிகழ்வாக அரச அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் நிதியினை வழங்கி கொடி வாரத்தை ஆரம்பித்து வைத்தார்.

எஸ்.என்.நிபோஜன்

Related posts

New Zealand names squad for Sri Lanka Tests

ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர், மங்கள சரவீரவை சந்திப்பு

ஹட்டன், நுவரெலியா அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு!