அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதியிடம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீது நேற்று (05) இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 177 பேர் வாக்களித்ததுடன், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரம் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்த நிலையில், குறித்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்ததது.

இந்நிலையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானம் தற்போது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஜனாதிபதி, அரசியலமைப்பு சபைக்கு பொலிஸ்மா அதிபர் பதவிக்கான பெயரை பரிந்துரைப்பார்.

Related posts

தற்போது வரை 1446 பேர் குணமடைந்தனர்

இராணுவ தளபதிப் பதவியில் இருந்து ஷவேந்திர விடைபெறுகிறார்

விஸ்வ புத்தருக்கு மீண்டும் விளக்கமறியல்!