உள்நாடு

தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (20) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேசபந்து தென்னகோனின் பிணை மனு மீதான தீர்ப்பை மாத்தறை நீதவான் அறிவித்தே இந்த தீர்ப்பை வழங்கினார்.
 
2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் நேற்று (19) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.

Related posts

கஞ்சி பானை இம்ரானுக்கு தமிழக D.G.P எச்சரிக்கை!

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு

வன்முறையை உருவாக்கிய தலைவரிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

editor