உள்நாடு

தேங்காய் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

ஹெட்டன் நகரில் தேங்காயின் விலை குறிப்பிடத்தக்களவு குறைவடைந்ததால், விற்பனை அதிகரித்துள்ளதாக நகர வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தேங்காய் வருமானம் அதிகரித்துள்ளதாக ஹெட்டன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் ஒரு தேங்காய் 220 ரூபாவிற்கு விற்பனையானது.

தற்போது அதன் விலை 100 ரூபாவிலிருந்து 170 ரூபா வரை குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் தேங்காயின் விலை மேலும் குறைவடைவதற்கான சாத்தியமுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்.

பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பான விசேட அறிவித்தல்