உள்நாடு

தேங்காய் பறித்து தருவதாக சிறுமியை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோக முயற்சி-சந்தேக நபர் கல்முனையில் கைது

(UTV | கொழும்பு) –

வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று அங்க சேட்டை செய்த முதியவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(25) மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதன் போது தனது வீட்டின் வளவில் விளையாடிக்கொண்டிருந்த சுமார் 8 வயதினை உடைய சிறுமியை அவ்வழியால் மாடு மேய்த்து கொண்டிருந்த 64 வயது மதிக்கதக்க முதியவர் தேங்காய் பறித்து தருவதாக அழைத்து சென்று அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக சிறுமியின் உறவினரால் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய சந்தேக நபரான முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று நீதிமன்ற நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக சிறுவர் பெண்கள் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

பாறுக் ஷிஹான்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடும் நெருக்கடியிலும் தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – இலங்கை மின்சார சபை!

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினியின் இறுதிக் கிரியை நாளை

editor

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதமளவில்