உள்நாடுபிராந்தியம்

தேங்காய் தலையில் விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சோகச் சம்பவம்

தேங்காய் தலையில் விழுந்ததில் இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்த சோகச் சம்பவம் வென்னப்புவ பகுதியில் பதிவாகியுள்ளது.

விபத்துக்குப் பிறகு மாரவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், இதில் 2 வயதான ஜீவன் குமார சஸ்மித் என்ற குழந்தை காயமடைந்தது.

வென்னப்புவ – பண்டிரிப்புவ பகுதியில் தேங்காய் மட்டை வெட்டும் வீட்டில் வேலை செய்யும் அவரது தாயும் தந்தையும் பணியில் இருந்த போதே குழந்தை இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் சுயநினைவை இழந்த சஸ்மித், மாரவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவரது நிலைமை மோசமாக இருந்ததால், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மறுநாள் காலை குழந்தை உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வறுமையில் வாடும் சஸ்மித்தின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட வசதி இல்லாததால், குழந்தையின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“அமைச்சுப் பதவிகளை ஏற்காது நாட்டைக் கட்டியெழுப்ப அரசுக்கு ஆதரவளிக்கிறோம்”

சட்ட சீர்திருத்த நடவடிக்கைகளில் அரசின் உடனடி கவனம் தேவை – ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை

editor

கடன் பெற்றவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு