உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது

தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று வெள்ளிக்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த தீ விபத்தின் போது பஸ்ஸின் சாரதிக்கும் பயணிகளுக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும்தெரிவித்தனர்.

Related posts

MT New Diamond – தீ வெற்றிகரமாக கட்டுப்பாட்டினுள்

புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் விசேட அறிவிப்பு

editor