தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்னவுக்கும் தொடங்கொடவுக்கும் இடையிலான பகுதியில் இன்றைய தினம் (16) பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
காலிக்கும், மாகும்புரவிற்கும் இடையில் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
பொலிஸாரும், பொதுமக்களும் இணைந்து பஸ்ஸில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.