உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் கடுவலை – பியகம இடைமாற்றத்தின் கடவத்தை வரையான பகுதி மூடப்படுகிறது

தெற்கு அதிவேக வீதியில் கடுவலை – பியகம இடைமாற்றத்தின் கடவத்தை வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதன் காரணமாக இந்த இடமாற்றப் பாதை முற்றாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடுவலையிலிருந்து மாத்தறை நோக்கி வாகனங்கள் உட்செல்லவும் வெளியேறவும் முடியாத நிலை காணப்படுகின்றது.

மேலும், கடவத்தையிலிருந்து கடுவலை நோக்கி வாகனங்கள் உட்செல்லவும் வெளியேறவும் முடியாத நிலை காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிப்பு

ஒழுக்காற்று குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள தயாசிறி ஜயசேகர

editor

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் சலுகை