தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சைக்கென வைத்தியசாலையில் அனுமக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (24) மாலை கொழும்பிலிருந்து மத்தளை நோக்கிச் சென்ற கார் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பிரதேசத்தில் இடது புறத்தில் உள்ள தடுப்புச் சுவரில் முட்டி மோதி வீதியில் கவிழ்ந்ததில் காரில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்து மேலும் இவ் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் மத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் என்றும் சம்பவத்தில் 30 மற்றும் 36 வயதுடைய இருவர் காயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் இவ் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ள அதேவேளை சம்பவம் குறித்து பின்னதுவ போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
