உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறியும் பேருந்தும் மோதி கோர விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று (13) காலை லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்து காரணமாக அந்த நேரத்தில் மாத்தறை நோக்கிய திசையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன், தற்போது போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிப்பு

editor

மாலைத்தீவில் இருந்து 179 பேர் நாடு திரும்பினர்

யாழ்ப்பாணத்தில் ரயிலில் சிக்கி யுவதியின் கால் துண்டான துயரம்

editor