உள்நாடு

தெமட்டகொடையில் பாழடைந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்கள் மீட்பு

தெமட்டகொடை பேஸ் லைன் வீதியில் களனிவௌி ரயில் மார்க்கத்திற்கு அருகில் உள்ள பாழடைந்த வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்களை பம்பலப்பிட்டி குற்றவியல் பணியகம் கண்டுபிடித்துள்ளது.

அங்கிருந்து 9 மிமீ ரக தோட்டாக்கள் பயன்படுத்தப்படும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும், இரண்டு தோட்டாக்கள் மற்றும் T-56 மெகசின் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொரளை வனாத்த பகுதியில் செயல்படும் இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களான வனாத்தமுல்லே துமிந்த மற்றும் சதுகே தரப்பிருக்கு இடையே இடம்பெற்று வரும் மோதல் காரணமாக எவரேனும் ஒருவரைக் கொலை செய்வதற்காக இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொரளை வனாத்தமுல்லே பகுதியில் இந்த குழுக்களுக்கு இடையே கடந்த காலங்களில் பல கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதி சொகுசு பேருந்துகள் மீது வழக்குத் தாக்கல்

ஒருபோதும் கபட அரசியலில் ஈடுபட மாட்டோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்