உள்நாடுபிராந்தியம்

தெமட்டகொடையில் ஒருவர் கொலை

தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவில பட்டுமக பகுதியில் நேற்று (13) மாலை, தடிகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தெமட்டகொடை பொலிஸ் நிலையத்துக்கு, ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்து தரையில் விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, இரவு நேர ரோந்து பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து, காயமடைந்த நபரை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்டவர், மேம் பாலத்துக்கு அருகில் தங்கியிருந்த, நிரந்தர வசிப்பிடம் இல்லாத நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளில், ஒரு குழுவினர் இவரை தடிகளால் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

மரணித்தவரின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்ய தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அருந்தித இராஜினாமா

இன்றும் சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்துண்டிப்பு

தமிழ் அரசு கட்சியின் வாக்கெடுப்பு ஆரம்பம்!