உள்நாடு

தென்னகோனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அது தொடர்புடைய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்தது.

கடந்த 2023 டிசம்பர் 31ம் திகதியன்று மாத்தறை பெலேனா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புபட்ட சம்பவத்திலாகும்.

இதையடுத்து அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் சீனாவிடம் இருந்து கடன்

ஊரடங்கை மீறுபவர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை

கலந்துரையாடல் வெற்றி – எரிபொருள் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லை – அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ

editor