உலகம்

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதியின் மனைவி கைது

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ கைது செய்யப்பட்டுள்ளார்.

கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, இலஞ்சப் புகார் உட்பட 16 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது மனைவி வெளியில் இருந்தால் சாட்சியங்களை கலைக்க நேரிடும் என பொலிஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொண்ட சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம், அவரைக் கைது செய்வதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து பாராளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறி, ஜனாதிபதி யூன் சுக் இயோல் கடந்த டிசம்பர் மாதம் இராணுவ அவசர நிலையை அறிவித்தார்.

இந்த இராணுவ அவசர நிலைக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியதால், சில மணி நேரங்களில் அந்த உத்தரவு கைவிடப்பட்டது.

இதற்கிடையில், இராணுவ அவசர நிலை உத்தரவு என்பது கிளர்ச்சிக்கு சமமானது என்று யூன் சுக் மீது பல தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

தென் கொரிய வரலாற்றில் ஜனாதிபதி பதவியில் இருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இந்நிலையில், அவரது மனைவியும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

-ரொய்ட்டர்ஸ்

Related posts

ஒரே நாளில் 4,529 பேரை காவு கொண்ட கொரோனா

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயீம் காசிம்

editor

ஜெலன்ஸ்கி : 137 ஹீரோக்கள் பலி, 316 பேர் படுகாயம்