உள்நாடு

துசித ஹல்லொலுவ கைது

நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப்பிரிவு முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.

நாரஹேன்பிட்ட பகுதியில் துசித ஹல்லோலுவவின் வாகனத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு சமீபத்தில் விசாரணையைத் தொடங்கியது.

விசாரணை தொடர்பாக பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்தார்.

Related posts

மருத்துவ துறையில் முதலிடம், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை பெற்றது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி!

editor

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – சட்டமா அதிபரின் மீளாய்வுக்கு

வெட் வரி அறவீடு தொடர்பில் புதிய அறிவிப்பு!