வகைப்படுத்தப்படாத

தீர்மானமின்றி நிறைவடைந்த கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக, பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவதம் நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்ற விவதம் நடத்துவதற்குறிய திகதியை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றத்தை​ கூட்டுவது சிறந்ததென பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமையவே இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Met. forecasts slight change in weather from tomorrow

அணுவாயுதம் தொடர்பான இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்களை ஈரான் மறுத்துள்ளது

279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி