உள்நாடுபிராந்தியம்

தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் பரவிய தீயை, தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மவுஸ்ஸாக்கலை இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடமைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின.

தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஸ்கெலியா பொலிஸார், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இடம்பெயர்ந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 21 உறுப்பினர்களை பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை – வெளியான பரபரப்புத் தகவல்கள்!

editor

கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்

editor

மேலும் 305,370 பைஸர் தடுப்பூசிகள் தாயகத்திற்கு