கிசு கிசு

திரையரங்குகளில் திரைப்பட காட்சிகளுக்கு ரத்து…

(UTV|INDIA) மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் திரையரங்குகளில் இன்று வியாழக்கிழமை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக, தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இன்றைய தினத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் இரண்டு நேர திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதற்கமைய மாலை முதல் வழமை போல் திரைப்படங்கள் திரையிடப்படும். இதற்கான அறிவிப்பை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 11 பேரை கடத்தி கொலை செய்து ராஜபக்ஷர் கடலில் போட்டனர்

Prank மற்றும் Tik – Tok ஆகியவற்றுக்கு தடை

இன்று இரவு எரிபொருள் விலை குறைக்கப்படும்?