உள்நாடு

திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபை தீர்மானம் எடுத்துள்ளது.

கிழக்கின் அடையாளச் சின்னமாக விளங்கும் இந்த பாரம்பரிய திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பங்குனி உத்தரமான எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தது.

எனினும் கொரோனா தொற்று அச்சத்தால் மக்களின் நலன் கருதி திருவிழாவை இந்த வருடம் ஒத்திவைக்க நடைபெற்ற நம்பிக்கை பொறுப்பாளர் கூட்டத்தில் உத்தேசிக்கப்பட்டது.

மேலும் வாழ்வாதாரமின்றி இன்னல்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 200 குடும்பங்களுக்கு திருகோணமலை பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தின் உதவியுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

editor

எதிர்வரும் 4 மாதங்களுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ள விதம்

மேலும் மூன்று செயலாளர்கள் நியமனம்