உள்நாடு

திரிபோஷாவை வீட்டிற்கு சென்று வழங்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) -நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக,சிறு குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா வகைகளை குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஊடாக வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத நிறையின் அடிப்படையில் குறித்த திரிபோஷாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கான விட்டமின் வகைகளையும் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மின்வெட்டு அமுலாகாது

சலுகை இல்லை என்றால் பேருந்து கட்டணம் 30% அதிகரிக்கும்

நாட்டில் HIV வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு..