உள்நாடு

தினேஷ் சாப்டர் கொலை வழக்கு, புதிய திருப்பம்

(UTV | கொழும்பு) – தினேஷ் சாப்டர் கொலை வழக்கு, புதிய திருப்பம்

ஜனசக்தி குழும தலைவர் தினேஷ் சாப்டர் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றது.
நேற்றயதினம் இந்த மரணம் குறித்து அவரது மனைவி மற்றும் மாமியாரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குற்றப்புலனாய்வவு திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் தொழிலதிபர் தேசிய வைத்திய அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே மூளைச்சாவு அடைந்திருந்தமை தெரிய வந்துள்ளது.

தினேஷ் சாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரல்லை மயானத்துக்கு அருகில் காரில் வைத்து கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றிரவே உயிரிழந்தார்.

பிரேதப்பரிசோதனையில் கழுத்து நெறிக்கப்பட்டமையினாலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது

ஆழ்கடல் மீனவர்களிடம் கொள்ளை – அறிக்கை வழங்கினார் ஆதம்பாவா எம்.பி

editor

சமந்தா பவர் இலங்கைக்கு