உள்நாடு

தினேஷ் குணவர்தன இந்தியா விஜயம்

(UTV|கொழும்பு)- இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவிற்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாகவும் இந்த விஜயம் காணப்படுவதுடன், அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

இதன்போது இந்தியாவிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா

UTV நடாத்தும் குறுந்திரைப்படப் போட்டி – 2024 || UTV Short Film Competition 2024

வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது