உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

தினமும் 07 மணி நேர மின் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் தினமும் 07 மணி நேர மின் வெட்டு அமுல் படுத்தப்படுவதனால் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நெடுந்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு பிரதேசத்திற்கு இலங்கை மின்சார சபையினால் நான்கு மின் பிறப்பாக்கிகள் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இரண்டு மின் பிறப்பாக்கிகள் பழுதடைந்துள்ளன.

அதனால் தினமும் 07 மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாம் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி பழுதடைந்த மின் பிறப்பாக்கிகளை உடனடியாக திருத்த வேலைகளை மேற்கொண்டு, சீரான மின் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

Related posts

கத்தி வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்ட உலர் உணவு பொதிகள் மீட்பு – 3 பேர் கைது – மன்னாரில் சம்பவம்

editor

மக்கள் மீது அதிக சுமையை ஏற்றும் வகையில் வரி மசோதா கொண்டு வரப் போகிறார்கள்