உள்நாடு

திட்டமிட்டவாறு உயர்தரப் பரீட்சை இடம்பெறும்

(UTV|கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை நிராகரித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித, உயர் தரப் பரீட்சையை நவம்பர் மாதம் ஒத்தி வைக்க எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

திட்டமிட்டவாறு க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளானது ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் என்றும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி

editor

அவதானம் மக்களே! காற்றின் மாசு அளவு இன்று அதிகரித்துள்ளது

SLFP அலுவலகத்திற்குள் நுழைய தடை!