உள்நாடு

திடீரென உயர்ந்த நீர்மட்டம் – 35 பேரை மீட்ட இராணுவம் – பாரிய உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டது

ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் சிக்கிய 35 பொதுமக்களை கெமுனு ஹேவா படையணி யின் நன்பெரியல் முகாமில் நிறுத்தப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ நிவாரணப் படையினர் நேற்று மாலை (01) வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

நன்பெரியல் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 75 சுற்றுலாப் பயணிகள் குழு இந்த சம்பவத்தை எதிர்கொண்டிருந்தனர்.

இராணுவத்தினரின் விரைவான நடவடிக்கையின் விளைவாக, ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் மேலும் உயர்வதற்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வெள்ளம் பாரிய அளவில் பெருக்கெடுத்து ஓடியமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய ஏற்படவிருந்த பாரிய உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“எதிர்கால நடவடிக்கை குறித்து இன்று தீர்மானம்”

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகத்தினை மூடத் தீர்மானம்

ஷாஃபியின் நிலுவைத் தொகையை வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல்