வகைப்படுத்தப்படாத

தாய்லாந்தில் குண்டுத்தாக்குதல் – 6 படையினர் பலி!

(UDHAYAM, COLOMBO) – தாய்லாந்தின் பட்டானி பிரதேசத்தில் வீதியின் ஓரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததில் தாய்லாந்து படையினர் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

பயங்கரவாதிகள் சிலரால் இந்த குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

2004 ம் ஆண்டு தொடக்கம் அந்நாட்டில் இடம்பெற்றுவரும் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக இதுவரை ஆறாயிரத்து 500க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, லண்டனில் இன்று அதிகாலை இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்தவர்களின் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த 8 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லண்டன் பின்ஸ்பெரி பார்க் பகுதியில் சிற்றூர்தியைச் செலுத்திய ஒருவர் அதனை பாதசாரிகள் மீது ஏற்றிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிற்றூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இது தீவிரவாத தாக்குதலா விபத்தா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

லண்டனில் இதுபோன்ற பல தீவிரவாத தாக்குதல்கள் அண்மையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Bangladesh rest Shakib for Sri Lanka ODIs

பாகிஸ்தான் சென்றுள்ள மலாலா

රන්ජන්ට එරෙහිව ශ්‍රේෂ්ඨාධිකරණය හමුවේ චෝදනා පත්‍ර භාර දෙයි