உள்நாடுபிராந்தியம்

தாய்ப்பால் அருந்திவிட்டு தூங்கிய குழந்தை உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்

யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் அருந்திய பின் விக்கல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மூன்று மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தை தாய்ப்பால் அருந்திய பின்னர் விக்கல் எடுத்துள்ள நிலையில், அதனை தொடர்ந்து தாய் தாலாட்டியதை அடுத்து குழந்தை தூங்கியுள்ளது.

நீண்ட நேரமாகியும் குழந்தை தூக்கத்தால் எழும்பாததால், தாயார் குழந்தையை எழுப்ப முற்பட்ட வேளை குழந்தை அசைவின்றி காணப்பட்டமையால், உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

குழந்தையின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

அநீதிக்குள்ளாகியுள்ள ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக நான் முன் நிற்பேன் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

சஜித்தின் எதிர்த்தரப்பு கூட்டணிக்கு அஞ்சி தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி – ஹரின் பெர்ணான்டோ [VIDEO]