உள்நாடு

‘தாய் நாட்டை வழி நடத்த தயார்’ – சஜித்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மொட்டு அரசாங்கத்தின் ஆணை முடிந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த அழகிய தீவை அழித்து விட்டதாகவும், அழிக்கப்பட்ட நிலத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தயின் தலைவர் என்ற வகையில் தலைமை தாங்கத் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து அரசாங்கத்தை நியமிப்பதாகவும் இதனைத் தவிர வேறு தெரிவுகள் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை எதிர்க்கும் பாராளுமன்றத்தில் யாரேனும் நாசகார செயலை செய்தால் அது தேசத்துரோக செயலாக கருதப்படும் எனவும் தாய் நாட்டை பாதுகாத்து தாய்நாட்டை வழிநடத்த தயாராக உள்ளோம் எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

சர்க்கரை, உளுத்தம் பருப்பு, வெங்காயம், வெங்காயம் விலையில் குறைவு

ஐ.தே.கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் நாளை