உள்நாடு

தாமரைக் கோபுர நுழைவுச்சீட்டு : மறுக்கும் சீனா தூதரகம்

(UTV | கொழும்பு) – தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டுக்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சீன தூதரகம்,

சமூக ஊடகங்களில் பரவும் நுழைவுச்சீட்டு போலியானது என்றும் அதை சமூக ஊடகங்களில் பகிரும் முன் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. எவ்வாறாயினும் தாமரை கோபுரம் குறித்த இலவச விளம்பரத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியின் காலம்: அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்

பேருந்து கட்டண உயர்வு குறித்து இன்று தீர்மானம்

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”