உள்நாடு

தான் நிரபராதி என மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குறிப்பிட்ட சிலர் தன்னை குற்றஞ்சாட்டிவரும் நிலையில் தான் நிரபராதி என மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இனவெறி கொண்ட ஒரு சிறிய குழு என்னை ஒரு குற்றவாளியாக சித்தரிக்க முயற்சிப்பதாக தெரிவித்த அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நான் வன்னி மாவட்டத்தில் முதலாவதாக எப்படி வந்திருக்க முடியும்? இனவாதத்தினை கிளறி இந்நாட்டினை அழிவுக்கு இட்டுச் சென்று, நல்லிணக்கத்தினை அழிக்க சிறு குழுவொன்று முயற்சித்து வருகின்றது. சிங்களம், முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் அவர்களை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நாட்டில் குரல் பதிவுகளை பதிவு செய்யவே ஓரிருவர் இருக்கிறார்கள். சட்டத்தினை கையில் எடுக்க வேண்டாம் என பேராயர் கார்தினல் அன்று ஒரு கோரிக்கையினை விடுத்திருந்தார். அன்று பேராயரது கோரிக்கையினை இன்றும் நாம் வரவேற்கிறோம்..” என ரிஷாத் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

இதுவரை 388 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

‘மக்களின் அழுத்தம் அரசாங்கத்திற்கு பயங்கரவாதமாக மாறியுள்ளது’

இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் கவலைக்குரிய செய்தி!