கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் தானாகவே திறக்கப்படவுள்ள நிலையில், பல பகுதிகள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கம்பளை, வெலிகல்ல, பேராதனை, கட்டுகஸ்தோட்டை ஆகிய பகுதிகள் அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.
